Saturday, November 28, 2009

பல நாட்கள் கழித்து , என்னுடைய எண்ணைகளை வெளிபடுத்த இங்கு வந்திருக்கிறேன்..,
என்னுடிய கல்லூரி வாழ்கையில் எத்தனையோ பாடங்களை கற்றுகொடுதிருகிறது. இந்த கல்லூரி.. வித வித மான மனிதர்களும் . அவர்களின் செயல்களும் , அதனால் எனக்கேற்பட்ட பாதிப்புகளும் சில நண்பர்களின் ஊக்கமும் புதிய வழிகாட்டுதல் களும் .. எத்தனை எத்தனை ... நிச்சயம் சில தினங்களில் அவை அனைத்தையும் மனம் திறப்பது என முடிவு செய்திருக்கிறேன்..
தொடரும்..கல்லூரி பாடங்கள்

Monday, July 28, 2008

என் காதல்!

கண்கள் சந்தித்து பேசாத பொழுதும்
உடல் மொழிகள் ஒத்து போனதால்
உருவகித்து உவந்தேன்
மென் காற்றில் பறந்தேன்..

குண்டு வெடிப்பு யார் பொறுப்பு?

வணக்கம் . இன்று எங்கு பார்த்தாலும் குண்டு வீச்சு . நாடே பரபரப்பான சூழ்நிலையில் இருக்கிறது . முன்பெல்லாம் தீவிரவாதிகளின் ஊடுருவல் அரசாங்கத்தின் கட்டுகோப்பில் இருந்தது. இன்றோ காலையில் பத்து குண்டுகள் மாலையில் பத்து என சரமாரியாக குண்டு மலை பொழிகிறது. தீவிரவாதிகளை பிடிக்கும் போலீசார் கூட அவர்களுக்கு எங்கிருந்து குண்டுகள் கிடைக்கிறது அதன் பூர்வீகம் போன்ற விஷயங்களை வெளியிடாமல் மறைத்து விடுகின்றனர். மக்களுக்கும் இது பற்றிய விழிபுணர்வே இல்லை . அதை தட்டி கேட்கவோ அதன் காரணத்தை அறியவோ யாருக்கும் பொறுப்பு இல்லை. அரசாங்கம் தான் அதற்கு காரணம் என்ற மனப்பான்மைக்கு வந்துவிட்டனர். அரசோ இது எதிர் கட்சியின் சதி என்று கை காட்டுவதற்கு தயாராக உள்ளது. எப்படியேனும் பாதிக்கப்படுவது மக்கள் தான்.அவ்வப்போது குண்டுகள் கண்டு பிடிக்கபட்டாலும் மக்களுக்கு இன்னும் அரசின் மீது நம்பிக்கை வரவில்லை . இது கட்சி சார்ந்த பிரச்சினை அல்ல . இது நாட்டின் மிக முக்கிய பிரமுகர்கள் அனைவரூம் சம்பந்தப்பட்ட விஷயம் . தவறு யாரிடம் ?

கண்ணமித்ரன்,பசுபதிபாளையம்.